வவுனியா பாடசாலை மாணவர்கள் சாதனை (Photos)
தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான பழுதூக்குதல் போட்டியில் வவுனியா பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குறித்த போட்டி நேற்று (28.08.2023) கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது.
தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான பழு தூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்களும், வவுனியா இறம்பைகுளம் மகளிர் வித்தியாலய மூன்று மாணவர்களும் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் பங்குப்பற்றியவர்கள் விபரம்
குறித்த போட்டியில் வவுனியா இறம்பைகுளம் மகளீர் வித்தியாலயத்தினை சேர்ந்த கவிஜாலினி 1ஆம் இடத்தினையும், ஏ.எம் பௌலா 2ஆம் இடத்தினையும் , ஆர்.தரணியா 3ஆம் இடத்தினை பிடித்ததோடு , வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவர்களான பி.மேரி அசெம்ரா 1ஆம் இடத்தையும் பா.கிசாளினி , பா.மதுசாளினி 3ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் ஞா. ஜீவன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் பயிற்சி பெற்று இறம்பைகுளம் மகளிர் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்களான திருமதி J.D.ரெஜினோல்ட் பெரேரா, திருமதி .அ.சகிதரன் ஆகியோரும் கோமரசன்குள பயிற்றுவிப்பாளர் கி.அம்பிகா ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



