கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த வவுனியா - மினாநகர் மக்கள்

Vavuniya Sri Lanka SL Protest
By Rakshana MA Jul 07, 2025 01:04 PM GMT
Rakshana MA

Rakshana MA

வவுனியா,(Vavuniya) சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மினாநகர் பிரதான வீதியானது நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் சந்திக்கும் சந்தியில் இந்தப் போராட்டம் இன்று (07.07.2025) இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “சூடுவெந்தபுலவு, மினாநகர் கிராமமானது 2013 ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் ஆகும். 

மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்

மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்

பிரதான வீதி

இந்தக் கிராமத்தின் பிரதான வீதியானது 12 வருடங்களாகப் புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. தினசரி கல்குவாரி டிப்பர் வாகனம் செல்வதால் கிராமத்தின் பிரதான வீதியானது சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த வவுனியா - மினாநகர் மக்கள் | Vavuniya Minanagar Road Protest

இங்கு சுமார் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருவதுடன், தினமும் 50 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இந்த வீதியால் பயணிக்கின்றனர். அண்மையில் ஒரு மாணவன் மோசமான நிலையில் விபத்துக்குள்ளானது.

ஆகவே, எங்களுக்கு இந்த வீதி தொடர்பான தெளிவை ஏற்படுத்தி வீதியைச் சிறப்பான முறையில் அமைத்துத் தந்து கல்குவாரி செல்லும் கனரக வாகனங்களுக்கு வேறு பாதை அமைத்துத் தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தனர். 

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

கவனவீர்ப்புப் போராட்டம்

மேலும், கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் இம்தியாஸ் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் மக்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன்,

கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த வவுனியா - மினாநகர் மக்கள் | Vavuniya Minanagar Road Protest

செட்டிகுளம் பிரதேச சபை ஊடாகக் குறித்த வீதியைப் புனரமைத்து தருவதாகவும், கல்குவாரி தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றிருந்தனர்.

அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம் அறிவிப்பு

அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம் அறிவிப்பு

தமிழினத்தை மண்ணுக்குள் கொன்று முடக்கிய இராணுவத்தினர்: அஞ்சி ஒதுங்கும் அநுர

தமிழினத்தை மண்ணுக்குள் கொன்று முடக்கிய இராணுவத்தினர்: அஞ்சி ஒதுங்கும் அநுர

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த தேங்காய் விலை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த தேங்காய் விலை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGallery