வவுனியா குருமன்காடு பகுதியில் இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டல்
வவுனியா - குருமன்காடு காளி கோவிலுக்கு அருகாமையில் இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது நேற்று (03) இடம்பெற்றது.
அதன்படி, வவுனியா, குருமன்காடு காளி கோவிலுக்கு அருகாமையில் இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைப்பதற்கு பட்டாணிச்சூர் புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மக்கள் பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்ட போதும் காணி விடுவிப்பு மற்றும் நகரசபையின் அனுமதி மறுப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கட்டடம் அமைக்க முடியாத நிலை காணப்பட்டது.
இஸ்லாமிய கலாசார மண்டபம்
தற்போது அதற்கான அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்டு இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், முத்து முகமது, மாநகர சபை உறுப்பினர்களான முனாவர், பர்சான், அப்துல் பாரி, எம்.லரீவ், மௌலவிகள், உலமாக்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





