வெட் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும் சுதந்திரக்கட்சி
Parliament of Sri Lanka
Srilanka Freedom Party
By Kamal
பெறுமதி சேர் வரி குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றில் இந்த சட்ட மூலம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.
விவாதத்தின் பின்னர் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது சட்ட மூலத்தை எதிர்த்து கட்சி வாக்களிக்கும் என சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துசார குணசிங்க இந்த விடயத்தை ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி குறித்த சட்ட மூலத்தை எதிர்ப்பதே கட்சியின் நிலைப்பாடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.