டீசல் விலை 63 ரூபாவால் அதிகரிக்கும்: விஜித ஹேரத்
டீசலின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லீட்டர் டீசல் தற்போது 346 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
டீசலின் விலை
18 சதவீதமாக வட் வரி விதிக்கப்பட்டதன் பின் ஒரு லீட்டர் டீசலின் விலை ஜனவரி முதல் 63 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வட் வரிக்கு உட்படுத்தப்படும் .
கடற்றொழில் துறை ஏற்கனவே சீர்குலைந்துள்ளதாகவும், 18 வீத வட் வரியை நடைமுறைப்படுத்துவது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.