வெதுப்பக துறை பாதிப்படையும் அபாயம்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கவலை

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 26, 2023 01:10 PM GMT
Fathima

Fathima

அடுத்த ஆண்டிலிருந்து வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக துறையிலுள்ளவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலையில் தாம் உள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பொருட்களது விலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நுகர்வோர் பாதிப்படைவர்

மேலும் தெரிவிக்கையில்,  தற்போது 15 சதவீதமாக உள்ள வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் வற் என்ற பெறுமதி சேர் வரியின் ஊடாக அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் வெதுப்பக துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெதுப்பக துறை பாதிப்படையும் அபாயம்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கவலை | Vat Tax Effected To Bakery Products

இந்நிலையில், வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமானால் நுகர்வோர் நேரடியாக பாதிக்கப்படுவர்.

இதனால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.