வாழைச்சேனையில் வான் விபத்து
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி பயணித்த வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம்
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் பதிவாகவில்லை.

இதேவேளை விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


