தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படாது! வஜிர

Ranil Wickremesinghe Vajira Abeywardena Election
By Kamal Mar 29, 2024 04:11 AM GMT

நாட்டில் எந்தவொரு தேர்தலும் ஒத்தி வைக்கப்படாது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டத்தின் காரணமாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படாது! வஜிர | Vajira Abey Ranil Presidential Election

தேர்தல்கள் 

எதிர்க்கட்சி குழுக்களுக்கு கோசங்களை எழுப்ப எந்தவொரு விடயமும் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்க உள்ளதாக குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை எதிர்நோக்கக் கூடிய பலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியாவின் சிறந்த நாடாக இலங்கையை தரமுயர்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.