நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்
By Rakshana MA
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றிடமானது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி வெற்றிடம்
அரசியலமைப்பின் 66 (அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் பத்தாவது நாடாளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |