அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்றைய (01) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 39 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 63 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபாய் 16 சதம், விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் 99 சதம்.
யூரோவின் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 69 சதம், விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 19 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 57 சதம், விற்பனைப் பெறுமதி 345 ரூபாய் 73 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 72 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 49 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 73 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 92 சதம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |