வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்..!
30% வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் முதலாம் திகதி இறுதி வரை மேலும் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி
இலங்கை அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக அமெரிக்கா விதித்த 44% வரியை 30% ஆகக் குறைப்பது சாத்தியமானதாகவும் ஹர்ஷன சூரியப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை ஏற்றுமதிகளின் மீது ஓகஸ்ட் முதலாம் முதல் 30% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அமெரிக்க மீது விதித்துள்ள வர்த்தகத் தடைகளை நீக்குமாயின், அமெரிக்கா விதித்துள்ள வரிகளை மீளாய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |