நாட்டிற்குள் நுழைய தடை! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America World
By Fathima Dec 17, 2025 08:50 AM GMT
Fathima

Fathima

சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளில் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குடிமக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி பிரகடனத்தின் படி, புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது முழுமையாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசா வரம்புகள் 

அதேநேரத்தில் 15  நாடுகளின் குடிமக்கள் சில விசா வரம்புகள் உட்பட பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நாட்டிற்குள் நுழைய தடை! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Us Imposes Entry Ban On 6 Countries

அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினர் கடுமையான பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவதற்கு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்தக் கட்டுப்பாடுகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டபூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், விசா வைத்திருப்பவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வேறு சில பிரிவுகளுக்கும் இது பொருந்தும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் புதிய விசா விண்ணப்பங்கள் கடுமையான ஆய்வு அல்லது மறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, முழு பயணத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள்:

• சிரியா

• ஆப்கானிஸ்தான்

• மியன்மார்

• சாட்

• கொங்கோ குடியரசு

• பலஸ்தீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் பகுதி பயண மற்றும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 15  நாடுகளின் குடிமக்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

• நைஜீரியா

• அங்கோலா

• சாம்பியா

• கேமரூன்

• எத்தியோப்பியா

• கானா

• ஐவரி கோஸ்ட்

• செனகல்

• தன்சானியா

• உகாண்டா

• சிம்பாப்வே

• எரித்திரியா

• சூடான்

• சியராலியோன்

• காம்பியா போன்ற நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.