இலங்கையில் குவியும் அமெரிக்க டொலர்: புலம்பெயர் தொழிலாளர்களின் தலையீடு

Sri Lanka Dollars Ministry of Foreign Affairs - sri lanka
By Shalini Balachandran May 13, 2024 03:57 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 543 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணம்

அத்தோடு, கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 11.4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் குவியும் அமெரிக்க டொலர்: புலம்பெயர் தொழிலாளர்களின் தலையீடு | Us Dollar Accumulat In Srilanka By Migrant Worker

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ​​ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்ட தொகை 19.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.