அமெரிக்காவின் மற்றுமொரு சாதனை!
தென்அமெரிக்க கடல் பகுதிகளில், இதுவரை போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகுகள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான 36 படகுகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி புளோரஸ் கைது செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக, கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படகு ஒன்று தாக்கி அளிக்கப்பட்டு உள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட படகுகள்
இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு படை இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அந்த தகவலில், படகின் மீது நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவர் உயிர்தப்பி விட்டார். அந்நபரை தேடி, கண்டுபிடித்து மீட்கும்படி கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய நடவடிக்கையால், இதுவரை தென்அமெரிக்க கடல் பகுதிகளில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகுகள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான 36 படகுகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன.
கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால் 117 பேர் வரை பலியாகி உள்ளனர். அவற்றில் பல தாக்குதல்கள் கரீபியன் கடலில் நடந்துள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கலந்து கொண்டு பேசும்போது, கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் நீர்வழி பகுதியின் வழியே அமெரிக்காவுக்கு வர கூடிய, ஏறக்குறைய 100 சதவீதம் வரையிலான அனைத்து போதை பொருள் கடத்தல் படகுகளை நாங்கள் தடுத்து நிறுத்தி விட்டோம் என கூறியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.