ஈரானியத் துறைமுகங்களில் அமெரிக்காவின் கடும் முற்றுகை: திருப்பி அனுப்பப்பட்ட 38 கப்பல்கள்
ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படைகள் மிகக்கடுமையான கடல்சார் முற்றுகையை (Naval Blockade) நடைமுறைபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் பொருளாதார மற்றும் இராணுவ விநியோகச் சங்கிலியைத் துண்டிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமெரிக்கப் படைகளின் இந்தத் தடையை மீறி ஈரானிய எல்லைக்குள் நுழைய முயன்ற அல்லது அங்கிருந்து வெளியேற முயன்ற சுமார் 38 வணிகக் கப்பல்கள் இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
முட்டுக்கட்டை நிலை
அந்தக் கப்பல்கள் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டதோடு, மீண்டும் தத்தமது துறைமுகங்களுக்கே திரும்புமாறு அமெரிக்க அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முற்றுகையானது ஈரானின் வர்த்தகத்தை முடக்குவதுடன், அந்நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதியையும் பெருமளவில் பாதித்துள்ளது.
A U.S. Sailor watches a commercial ship as U.S. forces continue to enforce a blockade against Iranian ports, preventing ships from entering or exiting. American forces have directed 38 ships to turn around, or return to port. pic.twitter.com/Trtc41NZyp
— U.S. Central Command (@CENTCOM) April 27, 2026
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், இது ஒரு சட்டவிரோதச் செயல் என்றும் குற்றம் சாட்டி வருகிறது.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நிலவும் இந்த முட்டுக்கட்டை நிலை, சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய விநியோகச் சந்தையில் பெரும் பதற்றத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது.
அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் இப்பகுதியை முழுமையாகக் கண்காணித்து வருவதால், இப்பிராந்தியத்தில் மோதல் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.