ஈரானின் பயங்கர தாக்குதல்களில் பேரிழப்பை எதிர்கொள்ளும் அமெரிக்கா

Donald Trump United States of America Iran Middle East
By Sajithra Apr 27, 2026 02:18 AM GMT

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து, பெர்சிய வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதல்கள் இதுவரை பொதுவெளியில் பகிரப்பட்டதை விடவும் பல மடங்கு அதிக அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் (Command Centres), விமான நிறுத்துமிடங்கள் (Hangars) மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சிதைத்துள்ளன.

மேலும், ஓடுதளங்கள், ரேடார் அமைப்புகள் மற்றும் சில போர் விமானங்களும் சேதமடைந்துள்ளன.

கடுமையான சேதங்கள்.. 

குறிப்பாக, அமெரிக்காவின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, ஈரானின் பழைய எஃப்-5 (F-5) ரக போர் விமானம் ஒன்று ஊடுருவித் தாக்குதல் நடத்தியது அமெரிக்க இராணுவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பயங்கர தாக்குதல்களில் பேரிழப்பை எதிர்கொள்ளும் அமெரிக்கா | Us Bases Suffered Massive Damage In Iran Strikes

இந்தச் சேதங்களைச் சரிசெய்ய பல பில்லியன் டொலர்கள் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சேத விவரங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) முறையான தகவல்களை வெளியிட மறுத்து வருகின்றன.

இந்த வெளிப்படைத்தன்மையற்ற போக்கிற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 2026ஆம் ஆண்டிற்காக 838.5 பில்லியன் டொலர் பாதுகாப்பு பட்ஜெட் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த மோதலுக்காக கூடுதலாக 200 பில்லியன் டொலர் நிதியை ட்ரம்ப் நிர்வாகம் கோரியுள்ளது.

போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா சுமார் 11 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறி வருகின்றன.