ஜனாதிபதி அநுரவுக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் கலந்துரையாடல்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர உறவு
அத்தோடு, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
Pleasure to meet with President Dissanayake @AnuraDisanayake today to discuss the enduring U.S.-Sri Lanka partnership. I emphasized our shared goals of building stronger, inclusive communities and thriving local economies, highlighting that our assistance and programs empower Sri… pic.twitter.com/aKdrjE6NJv
— Ambassador Julie Chung (@USAmbSL) October 1, 2024
மேலும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதுடன், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |