சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

Risad Badhiutheen Children's Day Sri Lanka
By Laksi Oct 01, 2024 08:35 AM GMT
Laksi

Laksi

கருணை, அன்பு, அரவணைப்பு என்பவற்றால் சிறுவர்களின் மனநிலையை பலப்படுத்த, அவர்களுக்கான எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் மேலும், "சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர்களை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற நானே முயற்சித்தேன்: சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற நானே முயற்சித்தேன்: சாணக்கியன்

சிறுவர்களி எதிர்கால நம்பிக்கை

பாரிய சவால்களை எதிர்கொண்டே தங்களை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம், இன்றைய நவீன உலகில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட் | Rishad Greetings On Children S Day

இந்தச் சவால்களை சாதகமாக ஆக்குவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டியது சமூகத்தலைவர்களின் பொறுப்பாக உள்ளது.

இந்தப் பொறுப்பில் நாம் கவனம் செலுத்தி களப்பணிகளில் ஈடுபடுகின்றோம். எல்லா சிறுவர்களினதும் எதிர்கால நம்பிக்கைகளுக்கு, எமது செயற்பாடுகள் பக்கபலமாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW