புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு
நடந்து முடிந்த 2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி ஆலோசனை
இதன்போது, புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் முதல் வினாத்தாளுக்கான பரீட்சையை மீண்டும் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் கசிந்த மூன்று வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |