நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

Ceylon Petroleum Corporation Sri Lanka Petrol diesel price
By Laksi Sep 30, 2024 06:37 PM GMT
Laksi

Laksi

நாட்டில் இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

கொழும்பில் முகநூல் விருந்து: பல மாணவர்கள் கைது

கொழும்பில் முகநூல் விருந்து: பல மாணவர்கள் கைது

விலை திருத்தம்

95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு | Petrol Diesel Price Sri Lanka

லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: சுமந்திரன் பகிரங்கம்

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: சுமந்திரன் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW