அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!

Viral Video United States of America Earthquake
By Dharu Jul 16, 2023 11:31 AM GMT
Dharu

Dharu

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்கா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அலாஸ்கா மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.