ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு

United States of America Yemen World
By Rakshana MA Apr 15, 2025 10:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று (14) ஏமன் தலைநகரில் அமெரிக்காவின் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது.  

குறித்த விடயத்தினை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குடிநீர் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குடிநீர் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வான்வழித் தாக்குதல்

மேலும், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ஹவுதி குழு குறிப்பிட்டுள்ளது.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு | Us Airstrike On Yemen

இந்நிலையில், வான்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை ஹவுதி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 100-க்கும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

காசாவின் இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW