கிண்ணியாவில் பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு!
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
By H. A. Roshan
கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் வழிகாட்டுதலில், நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வியாபார நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
இதன்போது சுகாதார பரிசோதர்களால் கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத காய்கறிகள், கிழங்கு வகைகள், சர்க்கரை, நெற்பொரி என சுமார் 200 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் (24)இடம்பெற்றன. இதில் பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.


