திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு
திருகோணமலை (Trincomalee) கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்தொழிலாளர்கள் சிலர் நேற்றிரவு (26) கடலுக்குச் சென்றிருந்த நிலையில், கடலில் மிதந்து கொண்டிருந்த ட்ரோன் ரக விமானம் ஒன்றைக் கண்டுள்ளனர்.
அதனையடுத்து குறித்த ட்ரோன் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
விசாரணைகள்
இந்த நிலையில், இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ள விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே, “குறித்த ஆளில்லா விமானம் விமானப்படையின் பயிற்சி மற்றும் தாக்குதல் விமானங்களை இலக்காகக் கொண்ட விமானங்களின் பிரதியாக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம்.” என தெரிவித்துள்ளார்.
இதன்படி, கண்டு பிடிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஆளில்லா விமானம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |