சம்மாந்துறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் கைது
சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் கடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (6) சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக மணல் கடத்திய சந்தேக நபர் உட்பட மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த உழவு இயந்திரம் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றுவது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்ட நடவடிக்கை
மேலும், சந்தேக நபர் மற்றும் உழவு இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரனதுங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |