கம்பளையில் பேருந்தில் பயணித்த நபர் கடத்தல்

Sri Lanka Police Kandy Sri Lankan Peoples
By Madheeha_Naz Sep 24, 2023 07:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கம்பளையில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவரை சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.

கம்பளை ஜயமாலாபுர பிரதேசத்தில் வேனில் வந்த சிலர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட நபர் பயணித்த பேருந்தை நிறுத்தி கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நபர் கடத்தல்

கடத்தப்பட்ட நபர் பேருந்துக்குள் வைத்து கத்தியால் குத்தப்பட்டதாகவும் கம்பளை பொலிஸார் கூறுகின்றனர்.

கம்பளையில் பேருந்தில் பயணித்த நபர் கடத்தல் | Unknown Person Kidnapped In Sri Lanka

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.