பாலின வன்முறைக்கு எதிரான ஒற்றுமை : ஹரிணி அமரசூரியவின் கோரிக்கை

Colombo Sri Lanka Politician Prime minister Sri Lanka Harini Amarasuriya
By Rakshana MA Nov 27, 2024 01:48 PM GMT
Rakshana MA

Rakshana MA

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது கொழும்பு நகர சபை மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

“பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி  அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி" என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்றிருந்தார்.

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை

வன்முறைகளற்ற நாடு

பாலின அடிப்படையிலான வன்முறைகளை (GBV) இல்லாமல் செய்தல் மற்றும் இலங்கைக்குள் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கும் பொது இடங்களை உருவாக்குவதன் தேவை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பல்துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை அமுலாக்கத்தின் ஊடாக GBV தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

பாலின வன்முறைக்கு எதிரான ஒற்றுமை : ஹரிணி அமரசூரியவின் கோரிக்கை | Unity Against Gender Violence Harini

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, GBV – அற்ற இலங்கை என்ற நோக்கமானது, அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பான இடத்துடன் ஆரம்பமாகிறது.

குறித்த நிகழ்ச்சித் திட்டம் வெறுமனே அடையாளம் மாத்திரம் அல்ல. மாறாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க அனைத்து பிரஜைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு

விழிப்புணர்வுப் பேரணி

வன்முறைகளுக்கு எதிரான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் சுதந்திர சதுக்கத்திலிருந்து கொழும்பு மாநகர சபை வரை விழிப்புணர்வு பேரணியொன்றும் இடம்பெற்றமை நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.

பாலின வன்முறைக்கு எதிரான ஒற்றுமை : ஹரிணி அமரசூரியவின் கோரிக்கை | Unity Against Gender Violence Harini

மேலும் இந்த பேரணியின் ஊடாக ஒத்துழைப்பு அடையாளப்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பான பொது இடத்திற்கான உடனடி தேவை தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் குறித்த நிகழ்வில் அரச பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

முடிவுக்கு வரும் பாலின வன்முறை

அத்துடன் அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், தனியார் பிரிவினர் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகள் தொடர்பில் அவர்களின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி GBV க்கு எதிரான குறைந்த சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிப்பதற்கான கூட்டு வாக்குறுதியை வழங்கினர்.

பாலின வன்முறைக்கு எதிரான ஒற்றுமை : ஹரிணி அமரசூரியவின் கோரிக்கை | Unity Against Gender Violence Harini

இதற்கிடையில், 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கொழும்பு மாநகர சபை கட்டிடம் செம்மஞ்சல் நிறத்தில் ஒளியேற்றப்பட்டிருந்தது.

எனினும் GBV முடிவுக்கு கொண்டு வருவதற்கான நாட்டின் அர்ப்பணிப்புக்களை உத்வேகத்துடன் நினைவூட்டும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதி: இஸ்ரேல் போர் நிறுத்தலுக்கு ஒப்புதல் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் அமைதி: இஸ்ரேல் போர் நிறுத்தலுக்கு ஒப்புதல் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery