பிராந்தியத்தில் கட்சியைப் பலப்படுத்துதல்: ஐ.தே.கவின் இப்தார் நிகழ்வு (Phptos)

Ramadan Kalmunai Iftar
By Farook Sihan Apr 17, 2023 06:14 AM GMT

கல்முனை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களின் ஒன்று கூடலும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் (16.04.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபாரின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க ஆலோசனையில், “பிராந்தியத்தில் கட்சியைப் பலப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery