மக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கையை வலியுறுத்திய ஜனாதிபதி

By Mayuri Sep 26, 2024 10:50 AM GMT

இலங்கையில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளனர்.

மக்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த வருடத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

முழுமையான ஒத்துழைப்பு

இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி என்ற வகையில் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கையை வலியுறுத்திய ஜனாதிபதி | Uninterrupted Fuel For The People

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW