ஜனாதிபதியை சந்தித்துள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்
UNESCO
Ranil Wickremesinghe
Sri Lanka
By Mayuri
யுனெஸ்கோ அமைப்பில் இலங்கை இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Audrey Azoulay) சந்தித்துள்ளார்.
இலங்கையின் யுனெஸ்கோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (16) தாமரை தடாக திரையரங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வரலாற்று சிறப்பம்சங்களை பார்வையிட திட்டம்
இதேவேளை, நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒட்ரே அசோலே கண்டி மற்றும் தம்புள்ளை போன்ற வரலாற்று சிறப்பம்சங்களைக் கொண்ட இடங்களைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.