இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் முக்கிய பிரதிநிதி

UNESCO Ranil Wickremesinghe Sri Lanka
By Aadhithya Jul 13, 2024 03:34 AM GMT
Aadhithya

Aadhithya

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலே ( Audrey Azoulay) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்ரி அசுலே எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சர்

இந்த விஜயத்தின் போது, ​​பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் சந்திப்பார் என கூறப்படுகின்றது.

இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் முக்கிய பிரதிநிதி | Unesco Director General Sri Lanka Visit

அவர் நெலும் பொகுண திரையரங்கில் யுனெஸ்கோவில் இலங்கை அங்கத்துவம் பெற்றதன் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில்  பங்குப்பற்ற உள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள உலக பாரம்பரிய தளங்களையும் ஒட்ரி அசுலே பார்வையிட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW