மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

Batticaloa Eastern Province National People's Power - NPP
By Laksi Dec 13, 2024 01:42 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (13) மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கோரிக்கைகள்

வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து,காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை | Unemployed Graduates Protest In Batticaloa

கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து, போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியபோதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகிய சபாநாயகர்

பதவி விலகிய சபாநாயகர்

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Gallery