காசா போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் இஸ்ரேலின் நடவடிக்கை!
இஸ்ரேலிய மீறல்கள் காசா போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று ஐ.நா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 10 ஆம் திகதி, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இஸ்ரேல் குறைந்தது 393 மீறல்களைச் செய்துள்ளது என்றும் ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துமீறல்கள்
இந்த அத்துமீறல்களில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 339 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 871க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28 ஆம் திகதி நடந்த வான்வழித் தாக்குதல்கள் மிகவும் கொடிய இரவாக மாறியதாகவும் இதில் 104 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
போர் நிறுத்தத்தை பயனுள்ளதாக்க சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.