இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய பிரித்தானிய பொப் பாடகர்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற பாப் பாடகர் கேட் ஸ்டீவன்ஸ் இஸ்லாம் மாதத்திற்கு மாறியுள்ளார்.
இது குறித்து கேட் ஸ்டீவன்ஸிடம், "ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் இஸ்லாம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இதை ஒரு மேற்கத்தியராகவும் அறிவாளியான இசைக் கலைஞராகவும் நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்?'' என ஒரு செய்தியாளர் வினவியுள்ளார்.
இதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது, "எனது முந்தைய நிலையை அறிந்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னர் எத்தனையோ பெண்களுடன் இருந்திருக்கிறேன்.
நான் முஸ்லிமாகி விட்டேன்
எத்தனை பேர் என்று கூட எனக்குத் தெரியவில்லை. இந்த பெண்களிடமிருந்து எனக்குக் குழந்தைகள் இருக்கிறதா என்று கூட எனக்குத் தெரியாது. நான் இவ்வளவு சீரழிந்த வாழ்க்கையை நடத்தியபோது, நீங்கள் என்னைப் பார்த்துச் சிலிர்த்துப் போனீர்கள்.
இப்போது நான் முஸ்லிமாகி விட்டேன். நான் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொண்டேன். இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை.
தந்தையை தெரியாது
இஸ்லாமிய வாழ்க்கை முறையில் ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது போல், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பல கடமைகளையும் அவன் மீது சுமத்துகிறது.
மேற்கில் அத்தகைய பொறுப்பு இல்லை. ஒரு குழந்தைக்கு தனது தந்தையைத் தெரியாது. அந்தக் குழந்தை வாழ் நாளில் தனது தந்தையைக் கண்டிருக்க மாட்டான். ஒரு தந்தை தன் குழந்தைகளை ஒரு முறை கூட பார்க்காமல் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து விடுகின்றான் எனக் கூறியுள்ளார்.