ருவாண்டாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ள பிரித்தானிய உள்துறை செயலாளர்
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஜேம்ஸ், ருவாண்டாவுக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, புகலிடக் கோரிக்கையாளர்களின் புகழிடத்தை மாற்றும் ரிஷி சுனக்கின் குறிக்கோளின் ஒரு பகுதியாக இது அமையப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ருவாண்டாவில் உள்ள சட்ட அமைப்பில் காணப்படும் பிரச்சினையை நிவர்த்தி செய்ய பிரித்தானிய அரசாங்கத்தின் வழக்கறிஞர்களை அனுப்பும் யோசனையை உள்துறை அலுவலகம் கவனம் செலத்தி வருவதாக கூறப்படுகிறது.
ருவாண்டா ஒப்பந்தம்
இந்நிலையில், ருவாண்டாவின் தலைநகர் கிகாலியை சென்றடைந்த, பிரித்தானிய உள்துறைச் செயலாளர், ருவண்டாவின் வெளியுறவு அமைச்சர் வின்சென்ட் பிருட்டாவை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வின்சென்ட் பிருட்டா,
"ருவாண்டா அகதிகளின் உரிமைகள் பற்றி ஆழமாக அக்கறை கொண்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும், சட்டவிரோத குடியேற்றத்தின் உலகளாவிய சவாலை சமாளிக்க நாங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகிறோம் என்பது குறித்தும் விவாதிக்க உள்ளோம்'' என கூறியுள்ளார் .