வாக்னர் குழு தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

United Kingdom Ukraine Russia Wagner Group
By Fathima Sep 15, 2023 10:26 PM GMT
Fathima

Fathima

ரஷ்யாவின் தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரித்தானிய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

வாக்னர் குழு தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Uk Declares Russia Wagner Group Terrorist

சட்டவிரோத செயல்

இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை தொடர்ந்து வாக்னர் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்தோடு இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷ்ய ராணுவத்துக்கு உதவியது.

இதற்கிடையே ரஷ்ய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது. சமீபத்தில் வாக்னர் படை தலைவர் விமான விபத்து ஒன்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.