ஜனாதிபதிக்கு 7 நாட்கள் காலக்கெடுவை விதித்துள்ள உதய கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார்.
இதுவரை வெளிவராத அறிக்கைகள்
எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன்.
இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும்.
எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |