சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் கௌரவிப்பு நிகழ்வு(Photos)
மலேசியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மனக்கணிதப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் திருநெல்வேலி UCMAS கிளையில் பயிலும் 19 மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த கௌரவிப்பு நிகழ்வானது இன்று (23.12.2023) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
UCMAS இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமையுரையாற்றியதுடன் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
சிறப்புரையாற்றியுள்ளார்.
அத்துடன் UCMAS சர்வதேச மனக்கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.