ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்பினர்

Srilanka Muslim Congress Ranil Wickremesinghe Rauf Hakeem Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 25, 2024 09:19 AM GMT
Laksi

Laksi

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

கட்சியிலிருந்து  இடைநிறுத்தம்

எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக ஆதரிப்பதால், தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்பினர் | U L M M Mubeen Suspension Muslim Congress

அத்தோடு, இந்தவிடயம் தொடர்பில் முபீன் ஒரு வார காலத்துக்குள் தன்னுடைய விளக்கத்தை கட்சிக்கு அனுப்ப வேண்டும் என்றும் நிஸாம் காரியப்பர் கூறியுள்ளார்.

மேலும், அவர் சம்பந்தமாக கடைசி முடிவு கட்சியின் உயர் பீட கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW