சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்
சாய்ந்தமருது (Sainthamaruthu) பகுதியிலுள்ள உணவகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு தைபொய்ட் (Typhoid) தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இந்த நடவடிக்கையானது, இன்றைய தினம் (28) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றது.
சுகாதார நடவடிக்கை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் நடைபெற்றது.
அதேவேளை, இந்த செயற்பாட்டினால் 37 நபர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.
இதன்போது வைத்திய சுகாதார அதிகாரிகளால் அறிவுரைகள் வழங்கப்பட்டன. அவையாவன, தைபொய்ட் (Typhoid) என்பது salmonella என்னும் ஒரு வகை பக்டீரியாவால் பரவும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். இது மாசுபட்ட உணவு மற்றும் குடிநீரினால் பரவும் அபாயம் உண்டு.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு
குறித்த இந்த நோய் தொற்றினால் உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், இந்த நோயின் அறிகுறிகளாக நீண்ட நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, ஈரல் மற்றும் முதுகு வலி, வாந்தி மனச் சோர்வு, குடல் சீர் கேடுகள் என்பன ஏற்படும்.
எனவே இதிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் ஒரே வழி அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களிலும் பணிபுரியும் நபர்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


