மரக்கறி வாங்கச் சென்ற சகோதரர்கள் லொறி மோதி பரிதாப மரணம்
Hambantota
Accident
Death
Sri Lankan Schools
By Fathima
பெலியத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம் - பெலியத்தை பிரதேசத்தில் இன்று (24.06.2023) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சந்தையில் மரக்கறி வாங்க வீதியில் நடந்து சென்ற சகோதரர்கள் இருவர் மீது பின்னால் வேகமாக வந்த லொறி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
14 வயதுடைய எம். தரங்க என்ற சகோதரன் சம்பவ இடத்திலும், 20 வயதுடைய எம்.டில்ஷிகா என்ற சகோதரி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |