முறைப்பாட்டை விசாரணை செய்யாத பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்! வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Rakshana MA Mar 09, 2025 11:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

1.4 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 05 கால்நடைகள் திருடப்பட்டதாக வந்த இரண்டு புகார்களை முறையாக விசாரிக்கத் தவறியதால், நாரம்பல பொலிஸ் நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயல் அதிகாரியாகச் செயல்பட்ட ஒரு பொலிஸ் ஆய்வாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயல் அதிகாரியாகச் செயல்பட்ட ஒரு துணை ஆய்வாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்

ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்

கொடுக்கப்பட்ட முறைப்பாடு

ரூ.1.2 மில்லியன் மதிப்புள்ள 04 கால்நடைகள் மற்றும் சுமார் ரூ.200,000 மதிப்புள்ள ஒரு பசு திருடப்பட்டதாக இரண்டு நபர்கள் கடந்த 7 ஆம் திகதி புகார் அளித்துள்ளனர்.

முறைப்பாட்டை விசாரணை செய்யாத பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்! வெளியான தகவல் | Two Policemen Suspended For Failing Investigation

புகார்தாரர்கள் இருவரும் இந்தப் புகார்களை பொலிஸ் ஆய்வாளரின் செயல் அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயல் அதிகாரியாகச் செயல்படும் துணை ஆய்வாளரிடம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதவிடத்து தலைமையக்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குளியாப்பிட்டி மூத்த பொலிஸ் கண்காணிப்பாளருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 8ஆம் திகதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து நாரம்வல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமழான் நாள் 8 : மன அமைதியை அடையுங்கள்

ரமழான் நாள் 8 : மன அமைதியை அடையுங்கள்

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW