அனுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

Sri Lanka Police Anuradhapura Crime Law and Order
By Fathima Aug 17, 2023 12:14 PM GMT

அனுராதபுரம் ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக வாஹல்கட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொலிஸ் எல்லையை தாண்டி T-56 ரக துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

ஹொரவ்பொத்தான 01ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த யோதகே சுனில்சாந்த (58வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

அனுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது | Two Persons Arrested 56 Rifle Anuradhapura

கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW