ரிக்ரொக் செய்வதற்காக சென்ற இருவர் பலி
மட்டக்களப்பு - நாவலடியிலுள்ள வாவிப்பகுதியில் ரிக்ரொக் (TikTok)செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு - மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியில் இன்று(08.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்த சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு - நாவலடி பகுதியிக்கு இன்று பிற்பகல் சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.
அப்பகுதியில் ரிக்ரொக் செய்துவிட்டு தோணியில் மீண்டும் சீலாமுனைக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் பிரதேச மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியை சேர்ந்த 19வயதுடைய தவசீலன் கிருஸாந்த்,மாமாங்கம் பகுதியை சேர்ந்த 18வயதுடைய பிரபாகரன் பிருஜனன் ஆகிய இளஞர்களே இவ்வாறு வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நீரில் மூழ்கிய இளைஞர்களை கடற்றொழிலாளர்களும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளதுடன் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.