பலரை சோகத்தில் ஆழ்த்திய கொழும்பு மாநகர சபையின் பணியாளர் இருவரின் மரணம்

Sri Lanka Police Colombo Sri Lanka
By Dias Mar 27, 2023 03:29 PM GMT

கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்தை சுற்றுவட்டத்தில் உள்ள கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். 

 இச் சம்பவம் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

கழிவு நீர் வெளியேற்றும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இருவர் பரிதாபமாக பலி

இச்சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பணியாளர்கள் இருவரில் ஒருவர் கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றைய நபரும் மலசலகூட குழியில் இறங்கிய வேளை, அவரும் மலசலகூட குழியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் அவர்கள் மீட்கப்பட்டு  ஆபத்தான நிலையில் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பலரை சோகத்தில் ஆழ்த்திய கொழும்பு மாநகர சபையின் பணியாளர் இருவரின் மரணம் | Two People Died Colombo Police Investigation