நாளை பூமியை கடக்கும் இரண்டு சிறுகோள்கள்:பாதிப்பு குறித்து நாசா தகவல்
ஆஸ்டிராய்டு எனப்படும் மிகப்பெரிய இரண்டு சிறுகோள்கள் நாளைய தினம் (21.12.2024) பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இவை இரண்டும் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கக்கூடும். இருப்பினும், இவை பூமிக்கு அருகே எந்தவொரு பாதிப்பும் இன்றி கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.
இவ்விரண்டு சிறுகோள்களில் சிறியதானது, சுமார் 50 அடி சுற்றளவில், ஒரு சாதாரன வீட்டின் அளவை ஒத்து இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறுகோள்கள்
இது மணிக்கு சுமார் 47,634 கி.மீ. வேகத்தில், இந்திய மணிக்கணக்கில் டிச.21 மாலை 3.03 மணியளவில் சுமார் 1,06,000 கி.மீ தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு 2024 XQ4 எனும் அடையாளப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பூமியைக் கடக்கவிருக்கும் 2024 XN15 (எக்ஸ்என்) எனும் அடையாளப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் சிறுகோளானது 2024 XQ4 (எக்ஸ்க்யூ) ஐ விட சற்று பெரியதாக 60 அடி சுற்றளவில் மணிக்கு 35,051 கி.மீ. வேகத்தில், இந்திய மணிக்கணக்கில் டிச. 21 மாலை 2.38 மணியளவில், சுமார் 37,80,000 கி.மீ. தொலைவில் பூமியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாசா எச்சரிக்கை
நாசா 150 மீ. சுற்றளவுக்கும் மேல் 7.5 மில்லியன் கி.மீ. தொலைவுக்குள் பூமியைக் கடந்து செல்லும் பொருள்களை அபாயகரமான பொருளாக வரைப்படுத்துகின்றது.
இதில் தற்போது கடக்கவிருக்கும் 2024 XN15 மற்றும் 2024 XQ4 ஆகிய இரண்டு சிறுகோள்களும் இந்த வரம்புக்குள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |