காசா பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்:பலர் உயிரிழப்பு

Israel Israel-Hamas War Gaza
By Laksi Dec 16, 2024 04:33 PM GMT
Laksi

Laksi

தெற்கு காசா (Gaza) பகுதியில் உள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் நடாத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது தெற்கு காசா- கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குகதாசன் எம்.பிக்கும் கரி ஆனந்தசங்கரிக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

குகதாசன் எம்.பிக்கும் கரி ஆனந்தசங்கரிக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இதேவேளை, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்:பலர் உயிரிழப்பு | Israeli Attack On School In Gaza Kills 20

மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) போராளிகளுக்கு இடையே 14 மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதியில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கான முதல் சுற்றுப்பயணம் : ஜனாதிபதி அநுர

இந்தியாவிற்கான முதல் சுற்றுப்பயணம் : ஜனாதிபதி அநுர

ஒப்பந்தங்களை மீறிய இலங்கையர்கள் : இஸ்ரேலிலிருந்து வெளியேற்றம்!

ஒப்பந்தங்களை மீறிய இலங்கையர்கள் : இஸ்ரேலிலிருந்து வெளியேற்றம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW