நீரில் மூழ்கி இரண்டு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு

Jaffna Kalutara Eastern Province
By Laksi Aug 26, 2024 05:07 AM GMT
Laksi

Laksi

களுத்துறை - இஹலகந்த பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் என தெரியவருகிறது.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

பிரேத பரிசோதனை

மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு நீராடச் சென்ற போதே இருவரும் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கி இரண்டு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு | Two Health Inspectors Drowned In South

மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (26) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுமுறையின் பின் இன்று முதல் ஆரம்பமாகும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்

விடுமுறையின் பின் இன்று முதல் ஆரம்பமாகும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW