கடலுக்குச் சென்ற இரு மீன்பிடி படகுகள் மாயம்

Hambantota Jaffna
By Mayuri Jul 20, 2024 08:54 AM GMT

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலிருந்து கடந்த 7ஆம் திகதி மீன்பிடி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகில் நான்கு மீனவர்களும் அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகில் இரண்டு மீனவர்களும் இருந்துள்ளனர்.

விசாரணை முன்னெடுப்பு

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கடலுக்குச் சென்ற இரு மீன்பிடி படகுகள் மாயம் | Two Fishing Boats That Went To Sea Were Lost

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW