புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழப்பு.

Trincomalee Sri Lanka
By Nafeel May 13, 2023 09:09 AM GMT
Nafeel

Nafeel

 புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழப்பு. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹித்துல் ஊற்று  பகுதியில் புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று(13) காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன் போது காட்டு யானைகள் இறந்துள்ளதோடு மற்றொரு காட்டு யானை காயங்களுடன் காட்டுக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

யானைகள் மோதியல் இரண்டு மணித்தியாலங்கள்  புகையிரதம் செல்லுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே ஐம்பது யானைகள் விபத்தில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery